செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நாசாவின் ரெக்கநைசன்ஸ் ஆர்பிட்டர், அங்குள்ள வட்ட வடிவ மணல்மேடுகளின் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளது. மணல் மேடுகள், மிகச் சரியாக வட்ட வடிவில் காணப்படுவது அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மணல்மேடுகள், தெற்கு புறமாக சாய்ந்து, உயர்ந்து காணப்படுவதால், மணல் தெற்கு நோக்கி படிந்து வருவது நிரூபணம் ஆவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனினும், அப்பகுதியில், காற்று வீசும் திசை மாறி மாறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆர்பிட்டரில் உள்ள அதிக திறன் கொண்ட கேமராவில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில், மணல்மேடுகள் டெடி பியரை போல காட்சியளிப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். அதில், டெடி பியரின் கண்களாக காணப்படுவது கிரேட்டர்கள் எனவும், வட்டமான மேடு தலைப்பகுதி எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.