நாசாவின் டார்ட் திட்டம் - விண்கலம் குறுங்கோள் உடன் மோதவுள்ளது

September 25, 2022

பூமியை அச்சுறுத்தும் படி ஏதாவது விண்கல் அல்லது குறுங்கோள், பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தால், அதனை எதிர்கொள்ளும் விதமான பரிசோதனையை நாசா மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது, பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் உள்ள குறுங்கோள் மீது, டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் ( DART ) மூலம், விண்கலத்தை வேண்டுமென்றே மோதவுள்ளது. திங்கட்கிழமை அன்று சுமார் 14,000 mph வேகத்தில் விண்கலம் குறுங்கோள் மீது மோத உள்ளது. இவ்வாறு மோதும் பொழுது, குறுங்கோளில் […]

பூமியை அச்சுறுத்தும் படி ஏதாவது விண்கல் அல்லது குறுங்கோள், பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்தால், அதனை எதிர்கொள்ளும் விதமான பரிசோதனையை நாசா மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது, பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் உள்ள குறுங்கோள் மீது, டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் ( DART ) மூலம், விண்கலத்தை வேண்டுமென்றே மோதவுள்ளது. திங்கட்கிழமை அன்று சுமார் 14,000 mph வேகத்தில் விண்கலம் குறுங்கோள் மீது மோத உள்ளது.

இவ்வாறு மோதும் பொழுது, குறுங்கோளில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த மோதலை விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகள் பதிவு செய்ய உள்ளன. அதன் பிறகு, ஆய்வு முடிவுகள் வெளிவர பல மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இந்தக் குறுங்கோளால், உண்மையில் பூமிக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இது பரிசோதனைக்காக மட்டுமே நிகழ்த்தப்படும் நிகழ்வாகும்" என்று நாசா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, ஜோன்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி நான்சி ஜபாட் கூறுகையில், "இந்த மோதலால் அந்த குறுங்கோள் தூக்கி வீசப்படாது. மாறாக, 1 மில்லியன் கிலோ கணக்கிலான சிறிய பாறைகள் மற்றும் தூசி படலத்தை விண்வெளியில் வெளியேற்றும். அத்துடன் அந்த குறுங்கோளின் அமைப்பில் சிறிய மாற்றம் நிகழும்" என்று கூறியுள்ளார்.

நாசாவின் டார்ட் மிஷன், சுமார் 325 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், கடந்த 1996 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட டைமார்பஸ் (Dimorphism) என்ற குறுங்கோள் மீது விண்கலத்தை மோதவிட்டு, அதன் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. பூமியை நோக்கி சிறிய குறுங்கோள் ஒன்று 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வரும் என்று நாசா கணித்துள்ளது. அதற்காக லூசி என்ற விண்கலத்தை ஜூபிட்டர் கோளை நோக்கி செலுத்தி, குறுங்கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அத்துடன், 2026 ஆம் ஆண்டு, குறுங்கோள்களின் எண்ணிக்கையை கணக்கிட, தனியாக ஒரு தொலைநோக்கியை செலுத்த திட்டமிட்டுள்ளது.

அத்துடன், இந்த டார்ட் விளைவுகளை, விண்ணில் உள்ள தொலைநோக்கிகள் பதிவு செய்வதோடு, அதனைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்த புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஹீரா என்ற ஐரோப்பிய விண்கலம் டார்ட் சென்ற பாதையிலேயே சென்று அதன் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, எதிர்காலத்தில் நேரும் குறுங்கோள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பரிசோதனை திட்டமாக டார்ட் செயல்படுத்தப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu