நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து மேற்கொள்ளும் க்ரூ 9 விண்வெளிப் பயணம், ஹெலன் புயல் காரணமாக செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி செயல்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, செப்டம்பர் 28 ஆம் தேதியில், அமெரிக்க நேரப்படி மதியம் 1:17 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 29 ஆம் தேதி இதற்கு மாற்று தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். இதன் காரணமாக, இந்தப் பயணத்தில் நாசாவின் விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவர் மட்டுமே செல்ல உள்ளனர்.