நாசாவின் ஸ்பிட்சர் தொலைநோக்கியை உயிர்த்தெழுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள்

விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, ஹப்பிள், ஜேம்ஸ் வெப் உள்ளிட்ட பல தொலைநோக்கிகளை நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. அதில், ஸ்பிட்சர் தொலைநோக்கியும் ஒன்றாகும். இது நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 3வது தொலைநோக்கி ஆகும். கடந்த 2003 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிட்சர் தொலைநோக்கி, 5 ஆண்டுகளுக்கு பணி செய்யும் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த 2020 ஜனவரி வரையில் பணி செய்தது. தற்போது, செயலிழந்த இந்த தொலைநோக்கியை மீண்டும் உயிர்த்தெழுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். […]

விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, ஹப்பிள், ஜேம்ஸ் வெப் உள்ளிட்ட பல தொலைநோக்கிகளை நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. அதில், ஸ்பிட்சர் தொலைநோக்கியும் ஒன்றாகும். இது நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 3வது தொலைநோக்கி ஆகும். கடந்த 2003 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிட்சர் தொலைநோக்கி, 5 ஆண்டுகளுக்கு பணி செய்யும் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த 2020 ஜனவரி வரையில் பணி செய்தது. தற்போது, செயலிழந்த இந்த தொலைநோக்கியை மீண்டும் உயிர்த்தெழுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர்.

வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட வான் இயற்பியல் நிறுவனம் ஒன்று, ஸ்பிட்சர் தொலைநோக்கியை உயிர்த்தெழுப்பும் முயற்சியில் முயற்சியில் களமிறங்கி உள்ளது. அதன்படி, ஸ்பிட்சர் தொலைநோக்கியை விண்கலம் மூலமாக அடைந்து, தொலைநோக்கியை பழுது பார்த்து, மீண்டும் அதன் இயக்கத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த தொலைநோக்கி, பூமியிலிருந்து 149.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu