நாசாவின் அறிவியல் பிரிவு தலைமை பொறுப்பு - முதல் முறையாக பெண் விஞ்ஞானி நியமனம்

February 28, 2023

நாசாவின் அறிவியல் பிரிவு தலைமை பொறுப்பில் முதல் முறையாக பெண் விஞ்ஞானி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். நாசாவில் நீண்ட நாட்களாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் நிக்கோலா பாக்ஸ். மேலும், நாசாவின், சூரியனை ஆராயும் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தில் இவர் முக்கிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவை தலைமை ஏற்று நடத்தி வரும் இவரை, நாசாவின் அறிவியல் பிரிவு துணை நிர்வாகியாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாசாவின் அறிவியல் பிரிவு […]

நாசாவின் அறிவியல் பிரிவு தலைமை பொறுப்பில் முதல் முறையாக பெண் விஞ்ஞானி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

நாசாவில் நீண்ட நாட்களாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் நிக்கோலா பாக்ஸ். மேலும், நாசாவின், சூரியனை ஆராயும் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தில் இவர் முக்கிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவை தலைமை ஏற்று நடத்தி வரும் இவரை, நாசாவின் அறிவியல் பிரிவு துணை நிர்வாகியாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாசாவின் அறிவியல் பிரிவு கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் இயங்கும் மிகப்பெரிய பிரிவாகும். செவ்வாய் கிரகத்தின் ரோபோக்கள் முதல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்திலும் இதன் பங்கு உண்டு. எனவே, இதன் தலைமை பொறுப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தாமஸ் ஜூர்புசன் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, அடுத்ததாக நிக்கோலா பாக்ஸ் நியமிக்கப்பட உள்ளார். அமெரிக்காவில் பலூன்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், நாசா தலைமையில் புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவையும் அவரே நிர்வாகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu