யுரேனஸ் கோளின் வளையம் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் பகிர்வு

யுரேனஸ் கிரகம் மற்றும் அதை சுற்றியுள்ள வளையம் ஆகியவற்றின் தெளிவான புகைப்படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, நெப்டியூன் கிரகத்தின் வளையங்களை புகைப்படம் எடுத்த தொலைநோக்கி, தற்போது யுரேனஸ் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி உள்ளது. சூரியனிலிருந்து ஏழாவது கிரகமாக யுரேனஸ் உள்ளது. இது 90 டிகிரி கோணத்தில் சுற்றி வருகிறது. எனவே, கோளின் துருவப் பகுதிகளில் நெடு நாட்களுக்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைப்பது போலவும், அதை தொடர்ந்து நெடு நாட்களுக்கு […]

யுரேனஸ் கிரகம் மற்றும் அதை சுற்றியுள்ள வளையம் ஆகியவற்றின் தெளிவான புகைப்படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, நெப்டியூன் கிரகத்தின் வளையங்களை புகைப்படம் எடுத்த தொலைநோக்கி, தற்போது யுரேனஸ் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி உள்ளது.

சூரியனிலிருந்து ஏழாவது கிரகமாக யுரேனஸ் உள்ளது. இது 90 டிகிரி கோணத்தில் சுற்றி வருகிறது. எனவே, கோளின் துருவப் பகுதிகளில் நெடு நாட்களுக்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைப்பது போலவும், அதை தொடர்ந்து நெடு நாட்களுக்கு இருளில் மூழ்குவது போலவும் இருக்கும். மேலும், சூரியனை முழுவதுமாக சுற்றி வர 84 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதன் புகைப்படத்தை வெளியிட்ட நாசா, "யுரேனஸ் கிரகத்தின் வடக்கு பகுதியில் தற்போது வசந்தகாலம் நிலவுகிறது. அதைத் தொடர்ந்து கோடை காலம் 2028 ஆம் ஆண்டு தொடங்கும்.” என்று கூறியுள்ளது. மேலும், “யுரேனஸ் கிரகத்தில் உள்ள 13 வளையங்களில், 11 வளையங்கள் இந்த புகைப்படத்தில் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. அவை ஒன்றுடன் மற்றொன்று மிகவும் நெருக்கமாக உள்ளதால், பிரகாசமாக காணப்படுகிறது” என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu