இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாசா பயிற்சி அளிக்கும் - கார்செட்டி அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை அனுப்ப பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாசா பயிற்சி அளிக்கும் என அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். அண்மையில், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான வர்த்தக விண்வெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய எரிக் கார்செட்டி, “நிகழாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள். மேலும், இஸ்ரோவுடன் இணைந்து […]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை அனுப்ப பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாசா பயிற்சி அளிக்கும் என அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான வர்த்தக விண்வெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய எரிக் கார்செட்டி, “நிகழாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள். மேலும், இஸ்ரோவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விண்வெளி தொடர்புகள் வலுவடைந்து வருகின்றன.” என்று கூறினார். மேலும், இந்திய வீரர்களுக்கு நாசா பயிற்சி அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu