பெனு குறுங்கோளின் மாதிரிகள் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தது - நாசா அறிவிப்பு

September 25, 2023

Osiris REx திட்டத்தின் மூலம் பெனு என்ற குறுங்கோள் அளவிலான விண்கல்லில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை நேற்று வெற்றிகரமாக பூமியை வந்து அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன்னர், விண்கல் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தின் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. திட்டமிட்டபடி பயணித்து வந்த மாதிரிகள் அடங்கிய பிரத்தியேக கலம், பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியது. அமெரிக்காவில் உள்ள உட்டா பாலைவனப் பகுதியில், கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. பூமியிலிருந்து ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் […]

Osiris REx திட்டத்தின் மூலம் பெனு என்ற குறுங்கோள் அளவிலான விண்கல்லில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை நேற்று வெற்றிகரமாக பூமியை வந்து அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
மூன்று தினங்களுக்கு முன்னர், விண்கல் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தின் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. திட்டமிட்டபடி பயணித்து வந்த மாதிரிகள் அடங்கிய பிரத்தியேக கலம், பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியது. அமெரிக்காவில் உள்ள உட்டா பாலைவனப் பகுதியில், கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. பூமியிலிருந்து ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பாராசூட் உதவியுடன் கலம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சுமார் 250 கிராம் எடையுள்ள மாதிரிகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளைக் கொண்டு, நாசா ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu