நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், அதிக தூரம் பயணித்து புதிய வரலாறை படைத்துள்ளது.
ஓரியன் விண்கலம், மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் தற்போது 419378 கிலோமீட்டர் தூரம் பூமியில் இருந்து பயணித்துள்ளது. இதுவே, அதிக தூரம் மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலமாக உள்ளது. முன்னதாக, அப்பல்லோ 13 திட்டத்தில் 248655 மைல்கள் தொலைவு மட்டுமே எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, நீண்ட தூரம் மனிதர்களை சுமந்து சென்று, பத்திரமாக தரையிறக்கும் திறன் படைத்ததாக, ஓரியன் விண்கலம் புதிய வரலாறு படைத்துள்ளது. இதனை நாசா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆறு நாட்களுக்கு, ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் எனவும், அதன் பின்னர் பூமிக்கு திரும்பும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.