ஆறு மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் நாசா விண்வெளி வீரர்கள்

நாசாவின் crew 7 திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்களது 6 மாத பயணத்தை நிறைவு செய்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, Jasmin Moghbeli, Andreas Mogensen, Satoshi Furukawa, Konstantin Borisov ஆகிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 6 மாதங்களாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில், மனித குலத்துக்கு நன்மை தரும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் […]

நாசாவின் crew 7 திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்களது 6 மாத பயணத்தை நிறைவு செய்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, Jasmin Moghbeli, Andreas Mogensen, Satoshi Furukawa, Konstantin Borisov ஆகிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 6 மாதங்களாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில், மனித குலத்துக்கு நன்மை தரும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று பூமிக்கு வந்தடைகின்றனர். புளோரிடா கடற்கரை பகுதியில் அவர்கள் தரை இறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Crew 8 திட்டத்தில் புதிய விண்வெளி வீரர்கள் சென்றுள்ள நிலையில், இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். தற்போதைய நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 11 வீரர்கள் தங்கி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu