பூமிக்கு திரும்பும் எக்ஸ்படிஷன் 68 நாசா விஞ்ஞானிகள்

February 25, 2023

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, எக்ஸ்படிஷன் 68 திட்டத்தின் படி, 4 பேரை விண்வெளிக்கு அனுப்பியிருந்தது. தற்போது, அந்த 4 விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய/அமேரிக்க வீரர்களை பூமிக்கு அழைத்து வர, ரோஸ்காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு திரும்பும் திட்டத்தின் படி, நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் காசண்டா ஆகிய விண்வெளி வீரர்கள் அதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டு […]

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, எக்ஸ்படிஷன் 68 திட்டத்தின் படி, 4 பேரை விண்வெளிக்கு அனுப்பியிருந்தது. தற்போது, அந்த 4 விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய/அமேரிக்க வீரர்களை பூமிக்கு அழைத்து வர, ரோஸ்காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு திரும்பும் திட்டத்தின் படி, நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் காசண்டா ஆகிய விண்வெளி வீரர்கள் அதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 5ம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 5 திட்டத்தின் மூலம், எக்ஸ்படிஷன் 68 பெயரில், 4 பேர் விண்வெளிக்கு பயணித்தனர். இந்த நால்வருக்கு மாற்றாக, க்ரூ 6 திட்டம் மூலம், வரும் பிப்ரவரி 28ம் தேதி, வேறு 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்த நிகழ்வை நாசா நேரலையில் ஒளிபரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu