சுமார் 5.5 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய விண்மீன் கூட்டத்தின் புகைப்படம் ஒன்றை ஹப்பிள் தொலைநோக்கி பகிர்ந்துள்ளது. ஹப்பிள் தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த புகைப்படத்துக்கு 60,000 விருப்பங்கள் மற்றும் எண்ணற்ற பாராட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
NGC 6611 என்று பெயரிடப்பட்டுள்ள விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை ஹப்பிள் தொலைநோக்கி எடுத்து அனுப்பி உள்ளது. ஈகிள் நெபுலா என்று இது அழைக்கப்படுகிறது. புகைப்படத்தில், நட்சத்திரங்களை சுற்றி காணப்படும் அடர்த்தியான தூசி படலங்கள் தெரிகின்றன. அவற்றுக்கு ஊடாக ஒளி கடந்து செல்வதால் விண்மீன் கூட்டம் மயக்கும் வகையில் ஒளிர்கிறது.