நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் உள்ள ராட்சச கருந்துளையில் இருந்து நட்சத்திரங்கள் பிறக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் உள்ள ராட்ச கருந்துளை ஒன்று, இரண்டு லட்சம் ஒளி ஆண்டுகள் நீளத்திற்கு புதிய நட்சத்திரங்களை வெளியிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நட்சத்திரங்கள் தவிர்த்து, வாயுக்களையும் இந்த கருந்துளை வெளியேற்றி உள்ளது. கருந்துளையில் இருந்து நீளும், நீளமான வால் போன்ற அமைப்பில் இது காணப்படுகிறது. மேலும், இந்தக் கருந்துளை சூரியனைப் போன்று 20 மில்லியன் மடங்கு எடை உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுப்பது இதுவே முதன்முறை என சொல்லப்பட்டுள்ளது.