800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜெல்லி பிஷ் கேலக்ஸி - ஹப்பிள் தொலைநோக்கியின் புகைப்படம் வெளியீடு

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், ஜெல்லி பிஷ் போன்ற அமைப்பில் கேலக்ஸி ஒன்று உள்ளது. பெகாசஸ் கூட்டமைப்பில் உள்ள இந்த கேலக்ஸியின் புகைப்படத்தை, ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இதனை, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்ட நாசா, நட்சத்திரங்கள் மற்றும் வாயுக்கள் இணைந்து இந்த தோற்றம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், புகைப்படத்தில் காணப்படும் கோளவடிவ அமைப்புக்கள் இதர பல கேலக்ஸிகள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. ஜெல்லி ஃபிஷ் கேலக்ஸியின் புகைப்படம், ஹப்பிள் தொலைநோக்கியின் வைட் […]

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், ஜெல்லி பிஷ் போன்ற அமைப்பில் கேலக்ஸி ஒன்று உள்ளது. பெகாசஸ் கூட்டமைப்பில் உள்ள இந்த கேலக்ஸியின் புகைப்படத்தை, ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இதனை, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்ட நாசா, நட்சத்திரங்கள் மற்றும் வாயுக்கள் இணைந்து இந்த தோற்றம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், புகைப்படத்தில் காணப்படும் கோளவடிவ அமைப்புக்கள் இதர பல கேலக்ஸிகள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

ஜெல்லி ஃபிஷ் கேலக்ஸியின் புகைப்படம், ஹப்பிள் தொலைநோக்கியின் வைட் ஃபீல்டு கேமராவின் திறனை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. புகைப்படத்தில் காணப்படும் பல்வேறு கேலக்ஸிகளின் தோற்றம் விண்வெளி துறையின் வளர்ச்சியை எடுத்துக் கூறுகிறது. நேற்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu