வியாழனின் சிவப்பு புள்ளி புயல் நகர்கிறது - ஹப்பிள் தொலைநோக்கி பகிர்ந்த தகவல்

October 10, 2024

பூமியை விட பெரியதாக இருக்கும் வியாழனின் சிவப்பு புள்ளி (GRS) புயல், 150 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது. தற்போது, நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், இந்தப் புயலில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் மாற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், சிவப்பு புள்ளி புயலானது சுருங்கி விரிவடைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்தப் புயல் ஜெல்லி போன்ற ஒரு பொருள் தள்ளாட்டம் அடையும் விதமாக நகர்வதை கண்டறிந்துள்ளனர். இந்தப் புயல், சுற்றியுள்ள […]

பூமியை விட பெரியதாக இருக்கும் வியாழனின் சிவப்பு புள்ளி (GRS) புயல், 150 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது. தற்போது, நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், இந்தப் புயலில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் மாற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், சிவப்பு புள்ளி புயலானது சுருங்கி விரிவடைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்தப் புயல் ஜெல்லி போன்ற ஒரு பொருள் தள்ளாட்டம் அடையும் விதமாக நகர்வதை கண்டறிந்துள்ளனர். இந்தப் புயல், சுற்றியுள்ள காற்று வீசும் பகுதிகளுடன் தொடர்பு கொள்வதே இந்த மாற்றங்களுக்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும், இந்தப் புயல் மேலும் சுருங்கும்போது நிலையானதாக மாறும் என கணித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகள், அமெரிக்க வானியல் சங்கத்தின் கூட்டத்தில் விரிவாக விளக்கப்படவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu