வியாழன், யுரேனஸ் கோள்களின் வானிலை மாற்றங்கள் - ஹப்பிள் தொலைநோக்கி பகிர்வு

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் குறித்த அரிய தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களில் ஏற்பட்டுள்ள வானியல் மாற்றங்களை இந்த தொலைநோக்கி பதிவு செய்து அனுப்பியுள்ளது. வியாழன் கிரகத்தில் அடிக்கடி புயல்கள் ஏற்படுகின்றன. புயல்கள் மூலம் ஏற்படும் சூழல்கள் கிரகத்தின் மேற்பரப்பில் அவ்வப்போது காணப்படும். இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதி, இளஞ்சிவப்பு நிறத்தில் வியாழனின் நிலவு லோ, கடுமையான மேகமூட்டத்திற்கிடையிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதே […]

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் குறித்த அரிய தகவல்களை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களில் ஏற்பட்டுள்ள வானியல் மாற்றங்களை இந்த தொலைநோக்கி பதிவு செய்து அனுப்பியுள்ளது.

வியாழன் கிரகத்தில் அடிக்கடி புயல்கள் ஏற்படுகின்றன. புயல்கள் மூலம் ஏற்படும் சூழல்கள் கிரகத்தின் மேற்பரப்பில் அவ்வப்போது காணப்படும். இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதி, இளஞ்சிவப்பு நிறத்தில் வியாழனின் நிலவு லோ, கடுமையான மேகமூட்டத்திற்கிடையிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், யுரேனஸ் கிரகத்தின் அச்சு, 8 டிகிரி அளவிற்கு மாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, யுரேனஸ் கிரகத்தின் வடதுருவம் சூரியனை நோக்கி திரும்பி உள்ளது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த முந்தைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu