நான்கு வருடங்களுக்கு முன்னர், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, நாசா, இன்சைட் லேண்டரை அனுப்பியது. தற்போது, இதன் சேவை நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி, இன்சைட் லேண்டரின் ட்விட்டர் கணக்கில், “எனது ஆற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, நான் அனுப்பும் இறுதி புகைப்படம் இதுவாக இருக்கலாம். என்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம். எனது பணிகள் சிறப்பாகவே நிறைவேறியது. இத்துடன் விடைபெறுகிறேன். நன்றி!” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஒரு இயந்திரத்தின் மூலம் அனுப்பப்பட்டாலும், இதில் ஆழமான உணர்வுகள் பொதிந்துள்ளதால், இணையவாசிகள் இன்சைட் லேண்டருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர். இந்த பதிவுக்கு 6.4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளன. முன்னதாக, இன்சைட் லேண்டரின் சோலார் பேனலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த பதிவுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இன்சைட் லேண்டர், இதுவரை எண்ணற்ற புகைப்படங்கள் மற்றும் செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தரவுகளை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.