பால்வீதி மண்டலத்தின் இதய பகுதி புகைப்படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்துள்ளது.
இதுவரையில் காணக் கிடைக்காத நுணுக்கமான தகவல்களை உள்ளடக்கி, பால்வீதி மண்டலத்தின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் நட்சத்திரங்கள் இதில் உள்ளன. பால்வீதி மண்டலத்தின் நடுவில் உள்ள மிகப்பெரிய கருந்துளையில் இருந்து 300 ஒளி ஆண்டுகள் தொலைவில், சஜிடேரியஸ் சி என்ற நட்சத்திர பிறப்பிடம் உள்ளது. இந்த பகுதியை, முன் எப்போதும் காணக் கிடைக்காத தெளிவுடன் ஜேம்ஸ் வெப் புகைப்படம் எடுத்துள்ளது. எனவே, இதன் மூலம், நட்சத்திர பிறப்பு, பிரபஞ்ச உருவாக்கம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.