பால்வீதி மண்டலத்தைப் போலவே மற்றொரு மண்டலம் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

February 14, 2023

நாசாவால் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, புதிதாக ஒரு கேலக்ஸியை கண்டுபிடித்துள்ளது. தி ஸ்பார்க்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கேலக்ஸி, நமது பால்வீதி மண்டலத்தின் ஆரம்பகால நிலைகளை ஒத்ததாக இருப்பதால், மிகவும் கவனம் பெற்றுள்ளது. மேலும், இது பால்வீதி மண்டலத்தின் பிம்பமாக பார்க்கப்படுகிறது. தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி என்ற ஆய்விதழில் இது பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நமது பால்வீதி மண்டலத்தில், கிட்டத்தட்ட 200 விண்மீன் கூட்டங்கள் உள்ளன. அதே வேளையில், […]

நாசாவால் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, புதிதாக ஒரு கேலக்ஸியை கண்டுபிடித்துள்ளது. தி ஸ்பார்க்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கேலக்ஸி, நமது பால்வீதி மண்டலத்தின் ஆரம்பகால நிலைகளை ஒத்ததாக இருப்பதால், மிகவும் கவனம் பெற்றுள்ளது. மேலும், இது பால்வீதி மண்டலத்தின் பிம்பமாக பார்க்கப்படுகிறது. தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி என்ற ஆய்விதழில் இது பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நமது பால்வீதி மண்டலத்தில், கிட்டத்தட்ட 200 விண்மீன் கூட்டங்கள் உள்ளன. அதே வேளையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்பார்க்லர் விண்மீன் மண்டலத்தில் 24 விண்மீன் கூட்டங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இது மிக இளமையானதாக கூறப்படுகிறது. இதனை ஆய்வு செய்வதன் மூலம், இந்த பால்வீதி மண்டலத்தின் உருவாக்கம் குறித்த பல தகவல்கள் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த கேலக்ஸி, பூமியிலிருந்து சுமார் 9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. எனவே, 9 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், நமது பால்வீதி மண்டலம் எவ்வாறு இருந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஆர்வமுடன் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu