நாசாவால் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பண்டோரா விண்மீன் குழுமத்தின் அதிசயத்தக்க புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளது.
விண்வெளியில் உள்ள பண்டோரா குழுமம், பல்வேறு விண்மீன் கூட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய விண்வெளி பொருளாக அறியப்படுகிறது. இதில் பல்வேறு கேலக்ஸிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள இன்ஃப்ரா ரெட் கேமரா தொழில்நுட்பம் மூலம், பண்டோரா குழுமத்தின் தெளிவான புகைப்படம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 30 மணி நேர கண்காணிப்பிற்கு பின்னர், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கேமரா மூலம், 4 முதல் 6 மணி நேர நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தொலைநோக்கி எடுத்த 4 புகைப்படங்களை பணரோமா முறையில் ஒன்றிணைத்து, பண்டோரா குழுமத்தின் மொத்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் மூலம், கேலக்ஸி உருவாக்கத்தில் நிகழும் ஆரம்பகால நிகழ்வுகள் குறித்த பல தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று கருதப்படுகிறது.