விண்வெளியில் உள்ள மேகங்கள் குறித்த விவரங்களை பகிர்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

January 26, 2023

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியிலிருந்து 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளி மேகம் ஒன்றை ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த பனி சூழ்ந்த மேகத்தில் பல்வேறு வேதிப்பொருட்களை இந்த தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், நாசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜேம்ஸ் வெப் அளித்த தகவல்களின்படி, விண்வெளியில் உள்ள அந்த பனி சூழ்ந்த மேகத்தில், மீத்தேன், சல்பர், நைட்ரஜன், எதனால் போன்ற வேதிப்பொருட்கள் […]

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியிலிருந்து 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளி மேகம் ஒன்றை ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த பனி சூழ்ந்த மேகத்தில் பல்வேறு வேதிப்பொருட்களை இந்த தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், நாசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜேம்ஸ் வெப் அளித்த தகவல்களின்படி, விண்வெளியில் உள்ள அந்த பனி சூழ்ந்த மேகத்தில், மீத்தேன், சல்பர், நைட்ரஜன், எதனால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், "இந்த மேகங்கள் வெறும் நீர் உறைந்து போவதால் உருவாகவில்லை; அதனுள் பல்வேறு பொருட்கள் மற்றும் தூசி படலங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளது. நட்சத்திரங்கள் பிறப்பதற்கு முன்னால் உருவாகும் மெத்தனால் வேதிப்பொருள் உறைந்து போவதால் இத்தகைய மேகங்கள் உருவாகலாம் என்று ஜேம்ஸ் வெப் அளித்த தகவல்கள் அடிப்படையில் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்வெளியில் காணப்படும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன அடர்ந்த மேகங்கள் குறித்த ஆய்வுகளில் தற்போது திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu