கருந்துளைக்குள் விழுந்தால் என்ன ஆகும் - நாசா பகிர்வு

விண்வெளியில் காணப்படும் கருந்துளைகள் ஒளியை கூட ஊடுறுவச் செய்யாத வகையில் மிகவும் அடர்த்தியாக இருக்கும். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை தனக்குள்ளாக ஈர்த்துக் கொள்ளும். இந்த நிலையில், கருந்துளைக்குள் விழுந்தால் என்ன ஆகும் என்பதை ஆய்வு செய்து வந்த நாசா, இது தொடர்பான ஸ்நீக் பீக் காணொளியை வெளியிட்டுள்ளது. அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் துணையுடன், கருந்துளைக்குள் ஒருவர் விழுந்தால் என்ன ஆகும் என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாசாவின் வான் இயற்பியலாளர் ஜெரிமி ஷ்நிட்மான் மற்றும் விஞ்ஞானி பிரைன் பவல் […]

விண்வெளியில் காணப்படும் கருந்துளைகள் ஒளியை கூட ஊடுறுவச் செய்யாத வகையில் மிகவும் அடர்த்தியாக இருக்கும். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை தனக்குள்ளாக ஈர்த்துக் கொள்ளும். இந்த நிலையில், கருந்துளைக்குள் விழுந்தால் என்ன ஆகும் என்பதை ஆய்வு செய்து வந்த நாசா, இது தொடர்பான ஸ்நீக் பீக் காணொளியை வெளியிட்டுள்ளது.

அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் துணையுடன், கருந்துளைக்குள் ஒருவர் விழுந்தால் என்ன ஆகும் என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாசாவின் வான் இயற்பியலாளர் ஜெரிமி ஷ்நிட்மான் மற்றும் விஞ்ஞானி பிரைன் பவல் ஆகியோர் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தினர். கருந்துளைக்கு 400 மில்லியன் மைல் தொலைவில் இருந்தே மிகப்பெரிய மாறுதல்கள் காட்டப்படுகிறது. கருந்துளையை நெருங்க நெருங்க கேமரா அசையாதது போல் காணப்படுகிறது. ஆனால், கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்தவுடன் வெறும் 12.8 வினாடிகளில் கேமரா விரிவடைந்து நொறுக்குகிறது. அதாவது, விண்வெளி நேரத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் உணரப்படுகிறது. அதன்படி, கருந்துளையில் உள்ளவர்கள் அதன் ஈர்ப்பு விசைக்கு வெளியே உள்ளவர்களை விட இளமையாக இருப்பர். - இவ்வாறு காட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu