வெள்ளி கிரகத்தில் எரிமலை - நாசா பகிர்வு

நாசா அமைப்பு, சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், வெள்ளி கிரகம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலை ஒன்றில், மாற்றம் ஏற்பட்டுள்ளது நாசாவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாசா இது தொடர்பாக பகிர்ந்துள்ள செய்தியில், “வெள்ளி கிரகத்தில் முதல் முறையாக, எரிமலை ஒன்றில், மாற்றம் உணரப்பட்டுள்ளது. 1990 களில், நாசாவின் மெக்கல்லன் திட்டத்தின் மூலம், வெள்ளி கிரகத்தின் ரேடார் புகைப்படங்கள் கிடைத்தன. […]

நாசா அமைப்பு, சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், வெள்ளி கிரகம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலை ஒன்றில், மாற்றம் ஏற்பட்டுள்ளது நாசாவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாசா இது தொடர்பாக பகிர்ந்துள்ள செய்தியில், “வெள்ளி கிரகத்தில் முதல் முறையாக, எரிமலை ஒன்றில், மாற்றம் உணரப்பட்டுள்ளது. 1990 களில், நாசாவின் மெக்கல்லன் திட்டத்தின் மூலம், வெள்ளி கிரகத்தின் ரேடார் புகைப்படங்கள் கிடைத்தன. அந்தப் புகைப்படங்களை அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், ஒரு வருடத்திற்குள் வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலை பெரியதாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அதன் வடிவமைப்பும் சற்று மாறுதல் அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த புகைப்பட ஆதாரங்களை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu