வெள்ளி கிரகத்தில் இப்போதும் எரிமலை சீற்றங்கள் நிகழ்வதாக கூறும் நாசா விஞ்ஞானிகள்

பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் வெள்ளி ஆகும். இந்த கிரகத்தில் அதிக எரிமலைகள் உள்ளன. இப்போதும், இந்த எரிமலைகள் சீற்றத்துடன் காணப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தாலியில் இருந்து நாசாவுக்காக பணி செய்யும் விஞ்ஞானிகள் வெள்ளி கிரகத்தில் எரிமலை சீற்றங்கள் நடைபெறுவதை இரண்டாம் முறையாக கவனித்துள்ளனர். கடந்த 1990 முதல் 1992 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெள்ளி கிரகத்தில் எரிமலை சீற்றம் நிகழ்ந்து லாவா குழம்புகள் வெளிவந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். நாசாவின் மெக்கல்லன் திட்டத்தின் […]

பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் வெள்ளி ஆகும். இந்த கிரகத்தில் அதிக எரிமலைகள் உள்ளன. இப்போதும், இந்த எரிமலைகள் சீற்றத்துடன் காணப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தாலியில் இருந்து நாசாவுக்காக பணி செய்யும் விஞ்ஞானிகள் வெள்ளி கிரகத்தில் எரிமலை சீற்றங்கள் நடைபெறுவதை இரண்டாம் முறையாக கவனித்துள்ளனர். கடந்த 1990 முதல் 1992 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெள்ளி கிரகத்தில் எரிமலை சீற்றம் நிகழ்ந்து லாவா குழம்புகள் வெளிவந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். நாசாவின் மெக்கல்லன் திட்டத்தின் மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாசா அனுப்பிய மெக்கல்லன் விண்கலம், 1994 ல் வெள்ளி கிரகத்துக்குள் விழுந்து செயலிழந்தது. இந்த நிலையில், தற்போது உள்ள வெள்ளி கிரகத்தின் புகைப்படங்களையும், நாசாவின் மெக்கல்லன் அனுப்பிய புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து எரிமலை சீற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், வரும் 2031 ஆம் ஆண்டு, வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வெரிடாஸ் என்ற புதிய திட்டத்தை நாசா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu