செவ்வாய் கிரக பாறைகளில் மாங்கனீசு ஆக்சைடு கண்டுபிடிப்பு

December 24, 2022

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர்கள், செவ்வாய் கிரக பாறைகளில் மாங்கனீசு ஆக்சைடு இருப்பதை கண்டறிந்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு, காலே மற்றும் என்டிவர் கிரேட்டர் பகுதிகளில் மாங்கனீசு ஆக்சைடு கண்டறியப்பட்டது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில், பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மாங்கனீசு ஆக்சைடு உருவாவதற்கு அதிக அளவிலான நீர் மற்றும் ஆக்சிஜன் தேவை. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், செவ்வாய் கிரகத்தில், அவ்வப்போது, வளிமண்டல […]

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர்கள், செவ்வாய் கிரக பாறைகளில் மாங்கனீசு ஆக்சைடு இருப்பதை கண்டறிந்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு, காலே மற்றும் என்டிவர் கிரேட்டர் பகுதிகளில் மாங்கனீசு ஆக்சைடு கண்டறியப்பட்டது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில், பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மாங்கனீசு ஆக்சைடு உருவாவதற்கு அதிக அளவிலான நீர் மற்றும் ஆக்சிஜன் தேவை. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், செவ்வாய் கிரகத்தில், அவ்வப்போது, வளிமண்டல ஆக்சிஜன் அளவு அதிகரித்து வந்துள்ளது என்று கூறியுள்ளனர். மாங்கனீசு ஆக்சைடு, கைனட்டிக் மாடலிங் முறை மூலமாகவும் உருவாகலாம். ஆனால், பண்டைய செவ்வாய் கிரக அமைப்பின்படி அது சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, செவ்வாய் கிரகத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், நீர் மற்றும் ஆக்ஸிஜன் இருந்துள்ளதை, விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர். மேலும், இது தொடர்பாக விரிவடைந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu