செவ்வாய் கிரகத்தில் நீரோடைகள் இருந்ததற்கான சான்று - நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர்

December 27, 2023

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், அங்கு தண்ணீர் இருந்ததற்கான மிகப்பெரிய ஆதாரத்தை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் எனவும், உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக, நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர் முக்கிய ஆதாரங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசிரோ கிரேட்டர் பகுதியில் பாறைகள் மற்றும் கற்கள் குறிப்பிட்ட அமைப்பில் உள்ளதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதனை […]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், அங்கு தண்ணீர் இருந்ததற்கான மிகப்பெரிய ஆதாரத்தை அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் எனவும், உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக, நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர் முக்கிய ஆதாரங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசிரோ கிரேட்டர் பகுதியில் பாறைகள் மற்றும் கற்கள் குறிப்பிட்ட அமைப்பில் உள்ளதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்த பாறைகளும் கற்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி, அங்கு தண்ணீர் இருந்ததற்கும், உயிர்கள் வாழ்ந்ததற்கும் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu