ஸ்டார்லைனரில் மர்ம ஒலிகள் கேட்டதாக கூறும் விண்வெளி வீரர்கள்

September 2, 2024

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர், செயலிழந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து "மர்ம ஒலிகள்" கேட்டதாக தெரிவித்தனர். "துடிக்கும், சோனார் போன்ற ஒலி" என விவரிக்கப்பட்ட இந்த ஒலி பதிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. ஒலியின் மூலத்தை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் காரணம் இன்னும் தெரியவில்லை. ஸ்டார்லைனர் கலத்தில் தொடர்ந்து இது போன்ற கோளாறுகள் ஏற்பட்டதால் […]

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர், செயலிழந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து "மர்ம ஒலிகள்" கேட்டதாக தெரிவித்தனர். "துடிக்கும், சோனார் போன்ற ஒலி" என விவரிக்கப்பட்ட இந்த ஒலி பதிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. ஒலியின் மூலத்தை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் காரணம் இன்னும் தெரியவில்லை.

ஸ்டார்லைனர் கலத்தில் தொடர்ந்து இது போன்ற கோளாறுகள் ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் ஸ்டார்லைனர் கலத்தில் பூமிக்கு திரும்புவது நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கலம் மூலம், வரும் 2025 பிப்ரவரியில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு பயணப்பட உள்ளனர். அதே சமயத்தில், ஸ்டார்லைனர் கலம், ஆள் இல்லாமல் அடுத்த சில தினங்களில் பூமிக்கு திரும்ப உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu