நாசாவின் வாயேஜர் 1 விண்கலத்தை தொடர்பு கொள்வதில் கோளாறு - நாசா அறிவிப்பு

December 18, 2023

நாசாவின் வாயேஜர் விண்கலம் பூமியிலிருந்து 15 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விண்கலத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. கடந்த 1977 ஆம் ஆண்டு, வாயேஜர் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கத்தில், 5 ஆண்டு கால திட்டமாக அறிவிக்கப்பட்ட இது, 46 ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தை தாண்டி பயணித்த முதல் விண்கலமாக இது உள்ளது. தற்போதைய நிலையில், வாயேஜர் 1 அனுப்பும் செய்திகள் 22 மணி […]

நாசாவின் வாயேஜர் விண்கலம் பூமியிலிருந்து 15 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விண்கலத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

கடந்த 1977 ஆம் ஆண்டு, வாயேஜர் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கத்தில், 5 ஆண்டு கால திட்டமாக அறிவிக்கப்பட்ட இது, 46 ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தை தாண்டி பயணித்த முதல் விண்கலமாக இது உள்ளது. தற்போதைய நிலையில், வாயேஜர் 1 அனுப்பும் செய்திகள் 22 மணி நேரங்களுக்கு பிறகு பூமியை வந்தடைகிறது. இந்த நிலையில், “வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப பணி செய்கிறது; ஆனால் விண்கலத்தில் இருந்து வரும் செய்திகள் பூமிக்கு வந்தடையவில்லை” என நாசா கூறியுள்ளது. எனவே, விண்கலத்தில் உள்ள குறிப்பிட்ட சில கருவிகளை செயலிழக்க செய்ய பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது. அதன்படி, 2030 ஆம் ஆண்டு வரையில் வாயேஜர் 1 செயல்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu