பிரெஷ் வொர்க்ஸ் நிறுவனம், தனது மூன்றாம் சுற்று பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த முறை எத்தனை ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த முறை, ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் பணி நீக்கம் நடைபெறும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, மூத்த மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இந்த முறை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நீக்கம் குறித்து பணியாளர்களுக்கே தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில ஊழியர்கள், வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியேறியதை வைத்து பணி நீக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 2022 டிசம்பரில் 90 பேரும், 2023 மார்ச்சில் 114 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு, தற்போது உலக அளவில் 5000 ஊழியர்களை கொண்டுள்ள பிரெஷ் வொர்க்ஸ், எத்தனை பேரை நீக்க உள்ளது என தெரியவில்லை.