அதானி குழுமத்திற்கு எதிராக தொடர்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க், தனது செயல்பாடுகளை நிறுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன், "இந்த முடிவுக்கு எதுவும் ஒரு சீரிய காரணம் இல்லை. மிரட்டல் அல்லது உடல்நல பாதிப்புகளும் இல்லை. கடந்த ஆண்டு குடும்பம், நண்பர்கள் மற்றும் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்தேன்" என்று கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டில், ஹிண்டன்பர்க் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுத்தியது. உலக அளவில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிடும் இந்த நிறுவனம், மோசடிகளை வெளியிடுவதிலும் முதலீட்டாளர்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.