முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடுகளின் காரணமாக ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வினை ஒத்திவைப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது