தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2025: சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம்

September 4, 2025

மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதல் இடம் பெற்றது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த முறை நாடு முழுவதும் 8,686 கல்வி நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் மட்டும் தென்னிந்தியாவில் இருந்து 3,344 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. கற்றல், ஆராய்ச்சி, தொழில் பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களின் […]

மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதல் இடம் பெற்றது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த முறை நாடு முழுவதும் 8,686 கல்வி நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் மட்டும் தென்னிந்தியாவில் இருந்து 3,344 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன.

கற்றல், ஆராய்ச்சி, தொழில் பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு ஐ.ஐ.எஸ். மற்றும் மும்பை ஐ.ஐ.டி. இடங்களை பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் 6 ஐ.ஐ.டி.க்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu