தமிழகத்தில் உள்ள ஆறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என். ஐ. ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சோதனையில் சம்பந்தம் உடைய நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் ஆறு இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் என். ஐ. ஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அதன் இயக்கத்தை பற்றியும் பெருமையாக பேசி வருகின்றனர். இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக நீடித்துவரும் நிலைமையில் இது பற்றி பெருமை பேசி வருவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.