காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ ஏ எஸ் உளவு அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக குறித்த ஆதாரங்களை என் ஐ அதிகாரிகள் சேகரித்து உள்ளனர்.
கனடாவில் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தி வருகிறது. இந்த கொலையால் இந்தியா மற்றும் கனடா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனடா இந்திய தூதரக உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் சொத்துக்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் பஞ்சாப்,அரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை தடுக்கும் வகையில் ஆறு மாநிலங்களில் 50 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள் டெல்லி மற்றும் உத்திர பிரதேசத்தில் தலா ஒரு இடத்தில் சோதனை நடைபெற்று வருகின்றன.