தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 28 அணிகள் பங்கேற்றனர். அவை எட்டு பிரிவுகளாக பிரிக்கபட்டது. இத் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தது. ஆட்டங்களின் முடிவில் கால் இறுதி சுற்றுக்கு அரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், மணிப்பூர், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா அணிகள் தேர்வாகின.
இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் கர்நாடகா-ஜார்க்கண்ட் அணிகள் மோதியதில் கர்நாடகா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- உத்திரபிரதேசம் அணிகள் மோதியது. ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. தமிழக அரை இறுதி சுற்றில் அரியானா அல்லது ஓடிசாவுடன் மோத உள்ளது.