தேசிய சீனியர் ஹாக்கி போட்டி

November 18, 2023

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத், பெங்கால், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 28 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. லீக் சுற்றில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் முதலாவது […]

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத், பெங்கால், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 28 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. லீக் சுற்றில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் திரிபுரா அணி இடையே ஏற்பட்ட போட்டியில் திரிபுரா விலகியது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் மணிப்பூர் மத்திய பிரதேசத்தை தோற்கடித்தது. டி பிரிவில் மராட்டிய அணி உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் தமிழக அணி அசாமை எளிதாக தோற்கடித்து போட்டியை தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் - ஆந்திரா, சண்டிகார் - கோவா, உத்தரபிரதேசம் - கேரளா, புதுச்சேரி - ராஜஸ்தான், அசாம் - இமாச்சலப் பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu