இந்தியா கூட்டணியின் 4- வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தியா கூட்டணியின் 4 வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ள செய்தியில் இந்தியா கூட்டணி சார்பில் எம்பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்து டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.