நேட்டோ சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்த தடை

April 3, 2023

நேட்டோவின் அதிகாரப்பூர்வ சாதனங்களில், டிக் டாக் செயலியை பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நேட்டோ அதிகாரிகள், “ஏற்கனவே, எங்களது சாதனங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக டிக் டாக் பயன்படுத்த இயலாது. எனினும், தற்போது அதிகாரப்பூர்வமாக செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். டிக்டாக் செயலி மூலம், சீன அரசாங்கத்திற்கு பயனர்களின் தகவல்கள் கசிவதாக கருதப்படுகிறது. எனவே, அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றின் சாதனங்களில் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

நேட்டோவின் அதிகாரப்பூர்வ சாதனங்களில், டிக் டாக் செயலியை பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நேட்டோ அதிகாரிகள், “ஏற்கனவே, எங்களது சாதனங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக டிக் டாக் பயன்படுத்த இயலாது. எனினும், தற்போது அதிகாரப்பூர்வமாக செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

டிக்டாக் செயலி மூலம், சீன அரசாங்கத்திற்கு பயனர்களின் தகவல்கள் கசிவதாக கருதப்படுகிறது. எனவே, அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றின் சாதனங்களில் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நேட்டோ புதிதாக இணைந்துள்ளது. இதற்கிடையே, “டிக் டாக் நிறுவனம் பீஜிங்கில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டது. எங்களிடம் சீன அரசாங்கம் தகவல்கள் எதையும் கேட்கவில்லை; நாங்களும் எதையும் வழங்கவில்லை. இனிமேல், எங்கள் தகவல்களை அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் சேமித்து வைக்கும்” என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu