சத்தீஸ்கரில் கட்டு பகுதியில் பதுங்கி இருந்த 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கர் வனப்பகுதிகள் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நக்சல்கள் பதுங்கி இருக்கும் பகுதியை சுற்றுவளைத்தனர். இதனால் பாதுகாப்பு படை மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் முடிவில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் .மேலும் அவர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.