நசாரா டெக்னாலஜிஸ் -ல் நிகில் காமத் முதலீடு - ஒரு வருட உச்சத்தில் நசாரா பங்குகள்

September 5, 2023

கேமிங் துறையில் மிக முக்கிய நிறுவனமாக நசாரா டெக்னாலஜிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில், சிரோதா நிறுவனத்தின் தோற்றுனர்கள் நிகில் காமத் மற்றும் நிதின் காமத் ஆகியோர் முதலீடு செய்கின்றனர். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் நிர்வாக குழு வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் 12.46% […]

கேமிங் துறையில் மிக முக்கிய நிறுவனமாக நசாரா டெக்னாலஜிஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில், சிரோதா நிறுவனத்தின் தோற்றுனர்கள் நிகில் காமத் மற்றும் நிதின் காமத் ஆகியோர் முதலீடு செய்கின்றனர். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் நிர்வாக குழு வழங்கி உள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் 12.46% உயர்ந்து, 853.8 ரூபாய்க்கு வர்த்தகமானது.

நிகில் காமத்தின் முதலீடு காரணமாக நசாரா டெக்னாலஜிஸ் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. மேலும், வரும் வாரங்களில், 1400560 பொது பங்குகளை வெளியிட உள்ளதாக நசாரா டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. ஒரு பங்கு 714 ரூபாய்க்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu