இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் - 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

April 8, 2023

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஏழு மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்த ஜவுளி பூங்காக்களின் மூலம் கோடி கணக்கிலான முதலீடுகள் கிடைக்கும். மேலும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், 2026-27 ஆண்டுகளுக்குள் இந்த பூங்காக்கள் […]

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஏழு மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்த ஜவுளி பூங்காக்களின் மூலம் கோடி கணக்கிலான முதலீடுகள் கிடைக்கும். மேலும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், 2026-27 ஆண்டுகளுக்குள் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பு 4445 கோடி என சொல்லப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக, நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் 200 கோடி இதற்கான தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 20 லட்சம் பேர் வரை பணி செய்ய வாய்ப்பு கிட்டும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu