பிரபல ஊடக நிறுவனமான என்டிடிவி, ஆங்கிலத்தில் செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த ஊடகம், தற்போது, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் செய்திகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்திடம் 9 செய்தி சேனல்களை தொடங்க விண்ணப்பித்துள்ளது. மேலும், இந்த சேனல்களுக்கான உரிமங்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளது.
கடந்த மே 17ஆம் தேதி, என் டி டிவி நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, 9 இந்திய மொழிகளில் சேனல்களை தொடங்க, அமைச்சகத்திடம் விண்ணப்பிப்பது குறித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.