அண்மையில், என்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கூடுதலாக 26% பங்குகளை பெற வெளிப்படையாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் 53 லட்சம் பங்குகள் சலுகை விலையில் விற்கப்பட்டன.
இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற என்டிடிவி நிர்வாகக் குழு சந்திப்பில், அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆர் ஆர் பி ஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், நிர்வாகக் குழுவில் 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியது. நிர்வாக குழுவின் அடுத்த சந்திப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், புதிய உறுப்பினர்கள் நியமிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்களை என்டிடிவி தெரிவித்துள்ளது.