ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையில், காசாவில் பலியானவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என கூறப்பட்டுள்ளது.
காசாவில் ஓராண்டுக்கு மேல் தொடரும் மோதலில் 45,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையில், காசாவில் பலியானவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக மீறியதாகவும், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பலியான சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 80% பேர் குடியிருப்பு கட்டிடங்களில் இருந்தனர். இதில் 44% குழந்தைகள் மற்றும் 26% பெண்கள் ஆவார்கள். இந்த நிகழ்வு தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.














