தென் சீன கடல் பகுதியில், தைவான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிட்டத்தட்ட 2 டஜன் சீன விமானங்கள் தைவான் வான் பகுதியில் சுற்றி வந்ததாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “18 பி எல் ஏ விமானங்கள், 4 பி எல் ஏ என் கலங்கள் தைவான் வான் பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் கண்டறியப்பட்டன. அவற்றில், 11 விமானங்கள் தைவான் ஜலசந்தியை கடந்து, தைவானின் தென்மேற்கு வான் பகுதிக்குள் நுழைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, தைவான் நாட்டுக்கு எதிராக சீனாவும், ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக அமெரிக்கா தைவானுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தைவானில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.