2024 ஆம் ஆண்டிற்கான தேசிய பெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய பெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் தனது மூன்று சுற்றுகள் பின் இரண்டாவது இடம் பிடித்தவர். நான்காவது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவில் ஈட்டி எறிந்து தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்று விளையாடவில்லை