மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று தொடங்கும் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான பதிவு முதற்கட்டமாக நடைபெறுகிறது.
2025ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதில், இந்தியா முழுவதும் உள்ள 15% அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வின் மூலம் நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.18 லட்சம் இடங்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்ற 12.36 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.