நீட் தேர்வு 2025-26 க்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களை நீட் தேர்வு மூலம் சேர்க்கை செய்யப்படுகிறது. மேலும், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் 2025-26 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்விற்கான பாடத்திட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வில் 180 வினாக்கள் கேட்கப்படும், ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுவது, மொத்த மதிப்பெண்கள் 720 ஆக இருக்கும். உயிரியல் பாடம் 360 மதிப்பெண்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 180 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகளைக் கொண்டிருக்கும். இந்த பாடத்திட்டங்களை நெட்வொர்க் பக்கம் https://www.nmc.org.in/ இல் பார்க்கலாம்.