நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு

நாளை 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. மருத்துவக் கல்வி பெற்றுத் தகுதி வாய்ந்த மருத்தவர்களாக உருவாக விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமான நுழைவாயிலாக இருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகியவற்றில் சேர, இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 […]

நாளை 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.

மருத்துவக் கல்வி பெற்றுத் தகுதி வாய்ந்த மருத்தவர்களாக உருவாக விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமான நுழைவாயிலாக இருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகியவற்றில் சேர, இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பரிட்சையை நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்கள் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன; ஆனால் திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட புதிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் 41 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குழுவின் விதிமுறைகளின்படி, செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை தேர்வறைகளுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் கட்டாயமாக இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் விபரங்களுக்கு http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழிகாட்டியாக பயன்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu