விண்ணப்பத்தில் தவறு உள்ளதால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்காக மருத்துவக் கல்வி இயக்குனரகம் நேரம் நீட்டித்து வாய்ப்பு வழங்கியுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று MBBS மற்றும் BDS படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 1800 பேரின் விண்ணப்பங்களில் குறைகள் இருந்ததால் அவை நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து மாணவி ஒருவர் வழக்குத் தொடர, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. 18ம் தேதி முடிவடைந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உரிய சான்றுகள் மற்றும் திருத்தங்களைச் செய்துபடி மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின்னர் வழக்கு முடிக்கப்பட்டது.














